செய்திகள்
ராகுல் காந்தி

மக்கள் கையில் பணம் வைத்திருப்பதை மறந்து விட வேண்டியதுதான்: பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி விமர்சனம்

Published On 2021-02-01 10:23 GMT   |   Update On 2021-02-01 13:47 GMT
2021-2022-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிலையில், ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
2021-2022-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் 

அதில் சுகாதாரத்துறைக்கு 2.23 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு, கொரோனா தடுப்பூசிக்கு 35 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு, பிரதமரின் சுயசார்பு ஆரோக்கியத் திட்டம் 64,180 கோடி ரூபாயில் மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்படும், நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டம் 1.41 லட்சம் கோடி மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்படும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய பழைய வாகனங்கள் திரும்பப்பெறும் கொள்கை அறிமுகம், காப்பீட்டுத்துறையில் அந்திய நேரடி முதலீடு 49-ல் இருந்து 74  சதவீதம் ஆக உயர்த்தப்படுகிறது போன்ற இடம் பிடித்திருந்தன.

பட்ஜெட் குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர், எம்.பி.யுமான ராகுல் காந்தி ‘‘மக்கள் கையில் பணம் வைத்திருப்பதை மறுந்துவிட வேண்டியதுதான். மோடி அரசு அவருடைய முதலாளித்துவ நண்பர்களுக்கு இந்தியாவின் சொத்தை ஒப்படைக்க திட்டமிட்டுள்ளது’’ என விமர்சனம் செய்துள்ளார்.

முன்னதாக பட்ஜெட்டில் ‘‘எம்எஸ்எம்இ-க்கு ஆதரவு, விவசாயிகள், தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை உருக்க வேண்டும். உயிர்களை காப்பாற்ற சுகாதாரத்துறை செலவினங்களை அதிகரிக்க வேண்டும். எல்லைகளை காப்பாற் பாதுகாப்புதுறை செலவினங்களை அதிகரிக்க வேண்டும்’’ ஆகிய இடம் பெறற வேண்டும் எனத் தெரிவித்தார்.
Tags:    

Similar News