செய்திகள்
கோப்புப்படம்

இன்று 1,48,266 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது: மத்திய சுகாதார அமைச்சகம்

Published On 2021-01-18 15:24 GMT   |   Update On 2021-01-18 15:24 GMT
இந்தியாவில் நாடு முழுவதும் மூன்று நாட்களில் 3,81,305 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நாடுதழுவிய கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. மூன்றாவது நாட்களாக இன்று 1,48,266 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மூன்று நாட்களில் 3,81,305 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்று 25 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

இதில் 580 பேருக்கு காய்ச்சல், தலைவலி போன்ற பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளது. இன்று கர்நாடக மாநிலத்தில் அதிகபட்சமாக 36,888 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 7628 பேருக்கும், தெலுங்கானாவில் 10352 பேருக்கும், மேற்கு வங்காளத்தில் 11588 பேருக்கும், டெல்லியில் 3111 பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இரண்டு பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். உத்தரகாண்ட், சத்தீஸ்கர், கர்நாடக மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் சிலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தகவலை மத்திய சுகாதார அமைச்சக கூடுதல் செயலாளர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News