செய்திகள்
கோப்புப்படம்

சட்டசபை தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய மேற்கு வங்காளம், அசாமுக்கு தேர்தல் கமிஷனர்கள் பயணம்

Published On 2021-01-18 02:34 GMT   |   Update On 2021-01-18 02:34 GMT
சட்டசபை தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா, தேர்தல் கமிஷனர்கள் சுஷில் சந்திரா, ராஜீவ் குமார் ஆகியோர் செல்கிறார்கள்
புதுடெல்லி:

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் முடிவடைய உள்ளது. அதனால், அந்த மாநிலங்களில் ஏப்ரல், மே மாதவாக்கில் சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது.

அங்கு மத்திய பாதுகாப்பு படை ஏற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை செயலாளருடன் தேர்தல் கமிஷன் கடந்த வாரம் ஆலோசனை நடத்தியது.

அடுத்தகட்டமாக, தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் பற்றி ஆய்வு செய்ய அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா, தேர்தல் கமிஷனர்கள் சுஷில் சந்திரா, ராஜீவ் குமார் ஆகியோர் செல்கிறார்கள். அவர்கள் இன்று (திங்கட்கிழமை) மாலையில், அசாம் மாநில தலைநகர் கவுகாத்திக்கு செல்கிறார்கள். அங்கு ஆய்வை முடித்துக்கொண்டு, 20-ந் தேதி (புதன்கிழமை) மாலையில், மேற்கு வங்காளத்துக்கு செல்கிறார்கள். துணை தேர்தல் கமிஷனர் சுதிப் ஜெயினும் மேற்கு வங்காள பயணத்தில் இணைந்து கொள்கிறார்.
Tags:    

Similar News