செய்திகள்
பிரதமர் மோடி

இன்று காலை 11 மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்

Published On 2020-11-29 06:12 IST   |   Update On 2020-11-29 06:12:00 IST
மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்.
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதமராக பொறுப்பேற்றதும் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். 

இந்நிலையில், இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று  காலை 11 மணிக்கு தொடங்க இருக்கிறது.

தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி மருந்து மற்றும் பொது முடக்க தளர்வுகள் குறித்து பிரதமர் மோடி பேசுவார் என தெரிகிறது.

Similar News