செய்திகள்
கோப்புப்படம்

கொரோனாவில் இருந்து அந்தமான் பழங்குடியினர் அனைவரும் குணமடைந்தனர்

Published On 2020-09-09 19:21 GMT   |   Update On 2020-09-09 19:21 GMT
தொடர் சிகிச்சையால் கொரோனாவில் இருந்து அந்தமான் பழங்குடியினர் அனைவரும் குணம் அடைந்திருப்பது பழங்குடியினர் நலத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
போர்ட் பிளேர்:

இந்தியாவில் பரவிய கொரோனா தொற்று ஏப்ரலில் அந்தமானிலும் தென்படத் தொடங்கியதால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அரசு சேவைகள் தலைநகரான போர்ட் பிளேரில் இருந்து வேறு தனித்தீவுக்கு மாற்றப்பட்டது.

கடந்த மாதம் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. அப்போது 11 அந்தமான் பழங்குடியினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அந்தமான் நிக்கோபாரில் 6 பழங்குடியின குழுக்கள் உள்ளன. அவர்களில் நிக்கோபார் தீவுகளில் வசிக்கும் நிக்கோபாரி பழங்குடியினர் தவிர்த்த, மற்ற 5 இனக்குழுக்களுக்கும் நோய்பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என இந்திய அரசாங்கம் எச்சரிக்கை தெரிவித்திருந்தது.

இவர்களில் அந்தமானில் பாதிக்கப்பட்ட பழங்குடியினருக்கு பாதிப்பு ஆரம்பகட்டத்திலேயே இருந்தது.

தொடர் கண்காணிப்பு மற்றும் சிகிச்சையால் அவர்கள் தற்போது பூரண குணம் அடைந்திருப்பது பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகளை நிம்மதி பெருமூச்சுவிடச் செய்துள்ளது.

நிக்கோபாரி பழங்குடியினர் யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News