செய்திகள்
அட்டர்னி ஜெனரல் வேணுகோபால்

உதவியாளருக்கு கொரோனா பாதிப்பு- தனிமைப்படுத்திக் கொண்ட மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர்

Published On 2020-09-07 08:27 GMT   |   Update On 2020-09-07 08:27 GMT
உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி மருத்துவத் துறையினர், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், பல்வேறு மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினரும் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த நிலையில், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். தன்னுடன் இருந்த வழக்கறிஞர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு உச்ச நீதிமன்றத்தில் இத்தகவலை கூறியதுடன், உச்ச நீதிமன்றத்தில் தலைமை வழக்கறிஞர் ஆஜராகும் வழக்குகளை ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அவரது கோரிக்கையை ஏற்று, தலைமை வழக்கறிஞர் இன்று ஆஜராகவேண்டிய மத்திய தீர்ப்பாய காலி பணியிடங்கள் தொடர்பான வழக்கை 15ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 

மத்திய நிர்வாக தீர்ப்பாயம் மற்றும் ஆயுதப்படை தீர்ப்பாயங்கள் உள்ளிட்ட தீர்ப்பாயங்களில் காலி பணியிடங்களை நிரப்புவது செய்வது தொடர்பான மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
Tags:    

Similar News