செய்திகள்
மத்திய பிரதேச மாநில முதல்வர்

மத்திய பிரதேசத்தில் ஜூன் 15-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

Published On 2020-05-30 13:58 GMT   |   Update On 2020-05-30 13:58 GMT
நாடு தழுவிய ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில், ஜூன் 15-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என மத்திய பிரதேச மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
நாடு தழுவிய பொது ஊரடங்கு நாளையுடன் முடிவடைகிறது. நாடு தழுவிய ஐந்தாம் கட்ட பொது ஊரடங்கை மத்திய அரசு அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவது, மேலும் தளர்வுகளை அறிவிப்பது போன்ற விஷயங்கள் குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது.

மத்திய அரசு பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதால் அதிகம் பாதிப்புள்ள 14 நகரங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் பொது ஊரடங்கு தளர்த்தப்படலாம் எனத் தகவல் வெளியானது.

இந்நிலையில் பொது ஊரடங்கு ஜூன் 15-ந்தேதி வரை மத்திய பிரதேசம் மாநிலத்தில் நீட்டிக்கப்படுகிறது என அம்மாநில முதல்வர் சவுகான் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நகரங்களில் மத்திய பிரதேசம் மாநிலத்தின் இந்தூர் நகரமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News