செய்திகள்
மராத்தி எழுத்தாளர் ரத்னகர் மட்காரி

பிரபல மராத்தி எழுத்தாளர் ரத்னகர் மட்காரி கொரோனாவுக்கு பலி

Published On 2020-05-19 03:01 GMT   |   Update On 2020-05-19 03:01 GMT
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல மராத்தி எழுத்தாளர் ரத்னகர் மட்காரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரத்னகர் மட்காரியின் மறைவுக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாாி மற்றும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
மும்பை :

பிரபல மராத்தி எழுத்தாளர் ரத்னகர் மட்காரி (வயது81). இவர் குழந்தைகளுக்கான பல்வேறு நாடகங்கள், புத்தகங்களை எழுதி உள்ளார். மேலும் நாவல்கள், சிறுகதைகளையும் படைத்து உள்ளார். ரத்னகர் மட்காரிக்கு கடந்த வாரம் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் அந்தேரி பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ரத்னகர் மட்காரியின் மறைவுக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாாி மற்றும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே இரங்கல் தெரிவித்து உள்ளனர். முதல்-மந்திரி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ‘‘இலக்கிய உலகில் விலை மதிப்பில்லாத முத்தை இழந்துவிட்டோம். அவர் குழந்தை மற்றும் வளர்ந்தவர்களுக்காக எழுதி உள்ளார். நாடகங்கள், சிறுகதைகள், நாவல்கள் என பல்வேறு வடிவங்களில் அவர் செய்த மகத்தான பங்களிப்பு மராத்திய இலக்கிய உலகத்தை வளப்படுத்தி உள்ளது’’ என கூறியுள்ளார்.
Tags:    

Similar News