செய்திகள்
கோப்புபடம்

அசாம் மாநிலத்தில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு

Published On 2020-04-10 11:01 IST   |   Update On 2020-04-10 19:57:00 IST
அசாம் மாநிலத்தில் கொரோனா வைரசால் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
கவுகாத்தி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6412 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 199 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 504 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் அசாம் மாநிலத்தில் கொரோனா வைரசுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. ஹைலகண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 65 வயது நபர் கொரோனா வைரசுக்கு பலியாகியிருப்பதாகவும், வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்திருப்பதாகவும் மாநில மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

எல்லைப் பாதுகாப்பு படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அந்த நபருக்கு, செவ்வாய்க்கிழமை இரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்பின்னர் அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதால் சில்சார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ஐசியு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலையில் அவர் உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு மந்திரி சர்மா இரங்கல் தெரிவித்துள்ளார்.

Similar News