செய்திகள்

அலிகார் சிறுமி டுவிங்கிள் குறித்து பரவும் தவறான தகவல்கள் -போலீசார் எச்சரிக்கை

Published On 2019-06-08 03:28 GMT   |   Update On 2019-06-08 08:39 GMT
உத்தரபிரதேசம் மாநிலத்தின் அலிகார் பகுதியில் டுவிங்கிள் எனும் 3 வயது குழந்தை கொலை செய்யப்பட்டது குறித்து தவறான தகவல்கள் பரவுவதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
லக்னோ:

உத்தரபிரதேசம் மாநிலத்தின் அலிகார் பகுதியில் வசிக்கும் பன்வாரிலால் என்பவர் வாங்கிய ர்ரு.10 ஆயிரம் கடனை திருப்பிக் கொடுக்காததால், அவரது குழந்தையை கடத்தி கொடூரமான முறையில் கொன்றனர்.

கடந்த 5ம் தேதி சிறுமியின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு தரப்பு மக்களும், அரசியல் மற்றும் திரை பிரபலங்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

பின்னர் சிறுமி டுவிங்கிளை கொன்ற சாதிக், அஸ்லாம் ஆகிய இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

சிறுமியின் சடலத்தினை பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது குறித்து அலிகார் பகுதி போலீசார் கூறியதாவது:



குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் குழந்தை எவ்வித பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாகவில்லை என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் குழந்தை வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும், உடலில் ஆசிட் ஊற்றி இருந்ததாகவும் தகவல்கள் தொடர்ச்சியாக வெளிவருகின்றன. மேலும் இரண்டு கண்களும் தோண்டப்பட்டது எனவும் தகவல் பரவி வருகிறது.

இவை அனைத்தும் முற்றிலும் தவறான தகவல்கள். இவற்றை பொது மக்கள் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். சிறுமி, இறுதியாக மூச்சு திணறல் ஏற்பட்டதால்தான் உயிரிழந்தாள். இதனை தவிர மற்ற அனைத்தும் போலியான தகவல்களே.

இவ்வாறு அவர் கூறினார்.
 

 
Tags:    

Similar News