செய்திகள்

சசிகலா புஷ்பாவை கைது செய்ய தடை நீட்டிப்பு

Published On 2019-05-07 19:58 GMT   |   Update On 2019-05-07 19:58 GMT
சிகலா புஷ்பா உள்ளிட்டோரை கைது செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடை அந்த வழக்குகள் முடிவடையும் வரை தொடரும் என நீதிபதிகள் தெரிவித்தனர். #SasikalaPushpa #SupremeCourt
புதுடெல்லி:

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட டெல்லி மேல்-சபை எம்.பி. சசிகலா புஷ்பா, அவருடைய முன்னாள் கணவர் லிங்கேஸ்வர திலகன், மகன் பிரதீப் ராஜா, தாயார் கவுரி ஆகியோர் மீது அவர்கள் வீட்டில் வேலை பார்த்து வந்த இளம்பெண்ணும், அவருடைய சகோதரியும் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பாலியல் வன்முறை வழக்கை 2016-ம் ஆண்டு பதிவு செய்தனர்.

இவ்வழக்கு தொடர்பாக சசிகலா புஷ்பாவை கைது செய்ய சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. இது தொடர்பான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-

சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் மீது கையெழுத்து மோசடி வழக்கு பதிய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இது தொடர்பாக மதுரை கே.புதூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட கிரிமினல் வழக்கு ரத்து செய்யப்படுகிறது.

புதுக்கோட்டை மற்றும் திசையன்விளை காவல் நிலையங்களில் பதியப்பட்ட வழக்குகளில் சசிகலா புஷ்பா உள்ளிட்டோரை கைது செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடை அந்த வழக்குகள் முடிவடையும் வரை தொடரும். இந்த வழக்கு களுக்கு எதிராக மனுதாரர் ஐகோர்ட்டை அணுகலாம்.

இவ்வாறு இத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.  #SasikalaPushpa #SupremeCourt 
Tags:    

Similar News