செய்திகள்

பயங்கரவாத இயக்கம் தோன்றிய நக்சல்பாரி கிராமத்தில் 90 சதவீதம் ஓட்டுப்பதிவு

Published On 2019-04-19 09:25 GMT   |   Update On 2019-04-19 09:25 GMT
பயங்கரவாத இயக்கம் தோன்றிய நக்சல்பாரி கிராமத்தில் 90 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. #LokSabhaElections2019

கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் பாராளுமன்ற தொகுதியில் நக்சல்பாரி என்ற கிராமம் உள்ளது.

நக்சலைட் போராட்டம் இந்தியாவில் முதன் முதலாக இந்த கிராமத்தில்தான் தோன்றியது. இதன் காரணமாக இந்த பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு நக்சலைட்டுகள் என்ற பெயர் உருவானது.

நக்சல்பாரி கிராமத்தில் மொத்தம் 906 வாக்காளர்கள் உள்ளனர். நேற்று டார்ஜிலிங் தொகுதி தேர்தல் நடந்த போது இந்த கிராமத்தில் எந்த அளவுக்கு வாக்குப்பதிவு நடைபெறும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டது.


நக்சலைட் ஊடுருவல் அதிகம் கொண்ட இந்த கிராமத்தில் கடந்த காலங்களில் பல தடவை மக்கள் தேர்தலை புறக்கணித்து உள்ளனர். சமீப காலமாகத் தான் அந்த பகுதி மக்கள் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த தடவை நேற்று மொத்தம் உள்ள 906 வாக்காளர்களில் 827 பேர் தங்களது வாக்கை பதிவு செய்து இருந்தனர். இது 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு ஆகும்.

நக்சல்பாரி கிராமத்தில் இது வரை இந்த அளவுக்கு வாக்குகள் பதிவானது இல்லை. இது புதிய சாதனையாக கருதப்படுகிறது. #LokSabhaElections2019

Tags:    

Similar News