செய்திகள்

உ.பி.யின் ஆசம்கர் தொகுதியில் அகிலேஷ் யாதவ் வேட்பு மனு தாக்கல்

Published On 2019-04-18 10:34 GMT   |   Update On 2019-04-18 10:34 GMT
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று உத்தர பிரதேசத்தின் ஆசம்கர் பாராளுமன்றத் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். #LokSabhaElections2019 #AkhileshYadav
ஆசம்கர்:

உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாடி கட்சியும் கூட்டணி அமைத்து பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றன. முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ், ஆசம்கர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இன்று அவர் தனது ஆதரவாளர்களுடன் ஆசம்கர் கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாகச் சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது பகுஜன் சமாஜ் கட்சி தேசிய பொதுச்செயலாளர் சதீஷ் சந்திர மிஸ்ரா உடனிருந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், உ.பி.யில் தனது ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சிப் பணிகளுக்காக மக்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது, ஆசம்கர் தொகுதியில் அகிலேஷ் யாதவின் தந்தை முலாயம் சிங் யாதவ் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #AkhileshYadav
Tags:    

Similar News