செய்திகள்

இளைஞர்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும்: பிரதமர் மோடி

Published On 2019-04-18 10:09 IST   |   Update On 2019-04-18 10:09:00 IST
இளைஞர்கள் அதிக அளவில் வாக்கினை பதிவு செய்வார்கள் என்று நம்புகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #Modi
புதுடெல்லி:

பாராளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி பாராளுமன்றத் தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

2-வது கட்ட தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மக்களவை தேர்தலுக்கான இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளது. வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும். இளைஞர்கள் அதிக அளவில் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்கினை பதிவு செய்வார்கள் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #Modi
Tags:    

Similar News