செய்திகள்

ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியது - மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் உயிர் தப்பினார்

Published On 2019-04-10 00:17 GMT   |   Update On 2019-04-10 00:17 GMT
மோசமான தட்பவெப்பநிலை நிலவியதால் மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் சென்ற ஹெலிகாப்டர் புத்த கயா பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. #RamVilasPaswan #Helicopter
கயா:

பீகார் மாநிலம் பெலகஞ்ச் என்ற இடத்தில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக லோக் ஜனசக்தி கட்சி தலைவரும், மத்திய மந்திரியுமான ராம்விலாஸ் பஸ்வான், பா.ஜனதா கட்சியை சேர்ந்த பீகார் துணை முதல்-மந்திரி சுஷில் மோடி ஆகியோர் ஹெலிகாப்டரில் நேற்று சென்றனர்.

அப்போது மோசமான தட்பவெப்பநிலை நிலவியதால் அந்த ஹெலிகாப்டர் புத்த கயா பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் ராம்விலாஸ் பஸ்வான், சுஷில் மோடி ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். #RamVilasPaswan #Helicopter 
Tags:    

Similar News