செய்திகள்

கடற்படை தளபதி நியமனத்தை எதிர்த்த வழக்கை திரும்பப் பெற்றார் துணை தளபதி

Published On 2019-04-09 10:32 GMT   |   Update On 2019-04-09 11:11 GMT
இந்திய கடற்படையின் தளபதியாக கரம்பிர் சிங் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கை துணை தளபதி பிமல் வர்மா இன்று திரும்பப் பெற்றார். #IndianNavy #KarambirSingh #BimalVerma #ViceAdmiral #Navychief
புதுடெல்லி:

உலகில் சிறப்பு வாய்ந்த கடற்படைகளில் ஒன்றாக இடம்பெற்றுள்ள இந்திய கடற்படை தளபதி சுனில் லான்பா-வின் பதவிக்காலம் 31-5-2019 அன்று முடிவடைகிறது. இந்நிலையில், புதிய தளபதியாக கரம்பிர் சிங் நியமிக்கப்படுவதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

இந்த நியமனத்தை எதிர்த்து ஆயுதப்படைகள் நிர்வாக தீர்ப்பாயத்தில் கடற்படை துணை தளபதி பிமல் வர்மா வழக்கு தொடர்ந்துள்ளார்.

கரம்பிர் சிங்


பணிமூப்பு அடிப்படையில் தளபதி பதவிக்கு தனது பெயரை பரிசீலிக்காமல் கரம்பிர் சிங்-கை நியமனம் செய்தது தவறு என தனது முறையீட்டில் பிமல் வர்மா குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையில், பிமல் வர்மா தனது முறையீட்டை துறைசார்ந்த குறைகேட்பு முகாம் மூலம் தீர்த்துக் கொண்டிருக்க வேண்டும் என கடற்படை உயரதிகாரிகள் கருத்து தெரிவித்தனர். இதனையேற்று, கடற்படையின் தளபதியாக  கரம்பிர் சிங் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கை துணை தளபதி பிமல் வர்மா இன்று திரும்பப் பெற்றார். #IndianNavy #KarambirSingh #BimalVerma #ViceAdmiral  #Navychief
Tags:    

Similar News