செய்திகள்

திருச்சூர் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் நடிகர் சுரேஷ்கோபிக்கு தேர்தல் அதிகாரி நோட்டீஸ்

Published On 2019-04-08 08:31 IST   |   Update On 2019-04-08 08:31:00 IST
தேர்தல் பிரசாரத்தில் ஐயப்ப சாமி பெயரை பயன்படுத்தி வாக்கு சேகரித்த நடிகர் சுரேஷ்கோபிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. #LokSabhaElections2019 #ThrissurConstituency #SureshGopi
திருச்சூர்:

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சுரேஷ்கோபி. இவர் பா.ஜ.க. சார்பில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். அந்த கட்சியின் சார்பில் தற்போது திருச்சூர் பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளராக அவர் களம் இறங்கி உள்ளார்.



இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தின் போது ஐயப்ப சாமியின் பெயரை பயன்படுத்தி வாக்கு சேகரித்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக திருச்சூர் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான, அனுபமாவிடம் புகார் செய்யப்பட்டது. இதுகுறித்து 48 மணி நேரத்தில் பதில் அளிக்குமாறு சுரேஷ்கோபிக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பினார்.

இந்த நடவடிக்கை குறித்து மாநில தேர்தல் அதிகாரி தீகா ராம் மீனா கூறும்போது, “தேர்தல் பிரசாரத்தின் போது ஐயப்ப சாமியின் பெயரையோ அல்லது வேறு எந்த கடவுளின் பெயரையோ பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. ஆனால் நடிகர் சுரேஷ்கோபி ஐயப்ப சாமி குறித்து பேசியதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதனால் அவருக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியது சரியான நடவடிக்கைதான்” என்றார். #LokSabhaElections2019 #ThrissurConstituency #SureshGopi

Tags:    

Similar News