செய்திகள்

நடிப்பதற்கும் மூளை வேண்டும் - ராகுல் மீது யோகி ஆதித்யநாத் காட்டம்

Published On 2019-03-27 08:18 GMT   |   Update On 2019-03-27 08:18 GMT
உத்தரபிரதேசத்தின் முதல்வரான யோகி ஆதித்யநாத் , ராகுல் காந்திக்கு நடிப்பதற்கும் மூளை வேண்டும் என சாடி பேசியுள்ளார். #YogiAdityanath #RahulGandhi
அகமதாபாத்:

பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அனைத்து கட்சி தலைவர்களும் பொதுக்கூட்டங்கள், பிரசாரம், செய்தியாளர் சந்திப்பு என தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் உத்தரபிரதேச முதல் மந்திரியும், பாஜக தலைவருமான யோகி ஆதித்யநாத், நேற்று குஜராத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றினார். இதில் அவர் பேசியிருப்பதாவது:

கடந்த 2017ம் ஆண்டு காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி குஜராத்தில் உள்ள சோமநாதர் கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு இஸ்லாமியர்கள் மசூதிகளில் தொழுகை செய்யும் போது அமர்வதைப்போல் அமர்ந்துள்ளார். அங்கிருந்த பூசாரி ஒருவர், ராகுலை திட்டி கால்களை மடக்கி உட்கார சொல்லியிருக்கிறார்.



இதிலிருந்து ஒன்று மட்டும் தெரிகிறது. தேர்தல் சமயங்களை தவிர மற்ற நாட்களில் காங்கிரஸின் இளைய தலைமுறையினர் கோவில்களுக்கு செல்வதில்லை. அவர்களுக்கு மற்ற நாட்களில் அதற்கான நேரமும் இருப்பதில்லை. மேலும் ஒருவர் நடிக்க வேண்டுமென்றால் அதற்கும் மூளை வேண்டும்.

உத்தரபிரதேசத்தில் கடந்த மாதம் தொடங்கி மார்ச் 4ல் முடிவடைந்த கும்பமேளாவில் 4 கோடி மக்கள் பங்கேற்றனர். இதுவரை இல்லாத மிகப்பெரிய அளவிலான மக்கள் கூட்டம் என்பதை காங்கிரஸ் கட்சியினர் அறிந்திருக்கக்கூடும். கங்கை நதி  தூய்மையாக இல்லை என காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகின்றனர். ஆனால் கும்ப மேளாவின் போது கங்கை நதியினில் மக்களின் கூட்டம், கங்கை நீரை மக்கள் பயன்படுத்துவதை கண்ட பின்பும் அதே தான் கூறுகிறார்கள்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார். #YogiAdityanath #RahulGandhi
Tags:    

Similar News