செய்திகள்

ஆந்திரா சட்டசபை தேர்தல் - சந்திரபாபு நாயுடு மகன், ஜெகன் மோகன் ரெட்டி வேட்புமனு தாக்கல்

Published On 2019-03-22 13:43 GMT   |   Update On 2019-03-22 13:43 GMT
ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவின் மகன் நார லோகேஷ் மங்களகிரி தொகுதியிலும், ஜெகன் மோகன் ரெட்டி புலிவேந்துலா தொகுதியிலும் வேட்புமனு தாக்கல் செய்தனர். #JaganMohanReddy #NaraLokesh #Jaganfilesnomination
அமராவதி:

ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மறைவுக்கு பின்னர் அவரது மகனான ஜெகன் மோகன் ரெட்டி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கி தலைவராக தொண்டர்களை வழிநடத்தி வருகிறார்.

ஆந்திராவில் ஏப்ரல் 11-ம் தேதியன்று சட்டசபை மற்றும் 25 பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. ஆந்திராவில் உள்ள 25 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 175 சட்டசபை தொகுதிகளுக்கான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.

தற்போது கடப்பா மாநிலத்தில் உள்ள புலிவேந்துலா தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டி வரும் தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார். 

இந்நிலையில், இன்று பிற்பகல் சுமார் 2 மணியளவில் புலிவேந்துலா தொகுதி தேர்தல் அதிகாரியிடம் ஜெகன் மோகன் ரெட்டி வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவின் மகனும் அம்மாநில தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரியுமான நாரா லோகேஷ் அமரவாதி மாவட்டத்தில் உள்ள மங்களகிரி தொகுதியில் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். #JaganMohanReddy #NaraLokesh #Jaganfilesnomination #NaraLokeshnomination #APAssemblyElections
Tags:    

Similar News