செய்திகள்

சரக்கு, சேவை வரி குறைப்பு எதிரொலி - வீட்டு வசதி நிறுவனங்களுக்கு சலுகை

Published On 2019-03-19 23:23 GMT   |   Update On 2019-03-19 23:23 GMT
வீடுகளுக்கான ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும், குறைந்த விலை வீடுகளுக்கான வரி 8 சதவீதத்தில் இருந்து 1 சதவீதமாகவும் குறைக்கப்படுகிறது. #GST #HousingUnit
புதுடெல்லி:

வீடுகளுக்கான ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும், குறைந்த விலை வீடுகளுக்கான வரி 8 சதவீதத்தில் இருந்து 1 சதவீதமாகவும் குறைக்கப்படுகிறது. இதற்கான முடிவு கடந்த மாதம் 24-ந் தேதி டெல்லியில் நடந்த 33-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இது ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இதை செயல்படுத்தும்விதம் பற்றி டெல்லியில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் நேற்று நடந்த 34-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்பட்டது. அது வருமாறு:-

* ஏப்ரல் 1-ந் தேதிக்கு முன்னர் பதிவு செய்து கட்டுமானப்பணிகள் நடந்து வருகிற வீட்டு வசதி திட்டங்களுக்கு பழைய சரக்கு, சேவை வரியை தொடர்வது பற்றி முடிவு எடுப்பதற்கு வீட்டு வசதி நிறுவனங்களுக்கு ஒரே ஒருமுறை வாய்ப்பு வழங்கப்படும். இது வீட்டு வசதி நிறுவனங்களுக்கு சலுகையாக அமைகிறது.

* புதிய வீட்டு வசதி திட்டங்களை பொறுத்தமட்டில், குறைந்த விலை வீடுகளுக்கு உள்ளட்டு வரி சலுகையின்றி 1 சதவீத வரி அமல்படுத்தப்படும். குறைந்த விலை வீடு என்பது ஜி.எஸ்.டி. கவுன்சில் தீர்மானித்தபடி, மாநகரங்கள் தவிர்த்த நகரங்களில் 60 சதுர மீட்டர், மாநகரங்களில் 90 சதுர மீட்டர் பரப்பளவு இருக்கலாம். வீட்டின் விலை ரூ.45 லட்சம் வரை இருக்கலாம்.

* குறைந்த விலை வீடுகளை தவிர்த்து பிற வீடுகளுக்கு அவை ஏப்ரல் 1-ந் தேதியோ, அதற்கு பின்னரோ பதிவு செய்து இருந்தால் அவற்றுக்கு உள்ளட்டு வரி சலுகையின்றி 5 சதவீத ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படும். ஏப்ரல் 1-ந் தேதிக்கு பின்னர் தவணை செலுத்தக்கூடிய வீடுகளுக்கும் இது பொருந்தும்.  #GST #HousingUnit

Tags:    

Similar News