செய்திகள்

மோடி வாழ்க்கை வரலாறு திரைப்படம் - ஏப்ரல் 5-ம் தேதி ரிலீஸ்

Published On 2019-03-19 11:00 GMT   |   Update On 2019-03-19 11:49 GMT
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறை விவரிக்கும் வர்த்தகரீதியான திரைப்படம் 23 மொழிகளில் தயாராகியுள்ளது. மோடியாக விவேக் ஓபராய் நடிக்கும் இந்தப்படம் ஏப்ரல் 5-ம் தேதி வெளியாகிறது. #PMNarendraModi #Modibiopic
மும்பை:

சுரேஷ் ஓபராய் மற்றும் சந்திப் எஸ் சிங் ஆகியோரின் தயாரிப்பில் பிரதமர் நரேந்திர மோடியின் இளமைக்காலம் மற்றும் அரசியலில் அவர் அடைந்த வளர்ச்சி ஆகியவற்றை விவரிக்கும் வர்த்தகரீதியான வாழ்க்கை வரலாறு திரைப்படம் தமிழ் உள்பட 23 மொழிகளில் தயாராகியுள்ளது.

’பி.எம்.நரேந்திர மோடி’ என்ற பெயரில் ஓமங் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் மோடியின் கதாபாத்திரத்தில் விவேக் ஓபராய் நடித்துள்ளார். போமன் இரானி, பர்கா பிஷ்ட், மனோஜ் ஜோஷி, ஜரினா வஹாப், பிரஷாந்த் நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் ஏப்ரல் 12-ம் தேதி வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த படத்தில் விவேக் ஓப்ராய் மோடி வேடத்தில் தோன்றும் 9 வித ’கெட்டப்’ கொண்ட போஸ்ட்டர்களும் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. இது சமூகவலைத்தளங்களில் பரவி நல்ல வரவேற்பை பெற்றது. இரண்டாவது போஸ்ட்டர் 8-3-2019 அன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.



ஆனால், கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் மறைவினால் இரண்டாவது போஸ்ட்டர் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.

முதல் போஸ்ட்டருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இந்தப் படத்தை முன்கூட்டியே வெளியிட தயாரிப்பாளர்கள் தீர்மானித்துள்ளனர். நாட்டில் உள்ள சுமார் 130 கோடி மக்களை இனிமேலும் காக்கவைக்க கூடாது என்பதால் இந்த திரைப்படத்தை முன்கூட்டியே ஏப்ரல் 5-ம் தேதி வெளியிடுகிறோம் என படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சந்திப் எஸ் சிங் குறிப்பிட்டுள்ளார்.
 #PMNarendraModi  #PMNarendraModibiopic #Modibiopic 
Tags:    

Similar News