செய்திகள்

நாட்டில் 2293 கட்சிகள் - 2 மாதத்தில் புதிதாக 149 கட்சிகள் பதிவு

Published On 2019-03-18 05:50 GMT   |   Update On 2019-03-18 07:40 GMT
இந்தியாவில் தற்போது 2293 கட்சிகள் உள்ளது. கடந்த 2 மாதத்தில் மட்டும் புதிதாக 149 கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. #ElectionCommissions #ParliamentaryElection
புதுடெல்லி:

வானத்தில் நட்சத்திரத்தை கூட எண்ணி விடலாம். இந்தியாவில் உள்ள கட்சிகளை எண்ணிவிட முடியாது என்று கேலியாக சொல்வது உண்டு.

அதுபோலத்தான் இந்தியாவில் அரசியல் கட்சிகள் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. இத்தனையும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் ஒரு சில கட்சிகள் மட்டும் தான் மக்களிடம் செல்வாக்கு பெற்று திகழ்கின்றன. ஆனாலும் கட்சியை தொடங்குவது குறைந்தபாடில்லை.

ஒவ்வொரு ஆண்டும் பல கட்சிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. இப்போது பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பதற்கு ஒரு நாளுக்கு முன்பு வரை பதிவு செய்த கட்சிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.



அதன்படி நாட்டில் 2293 கட்சிகள் உள்ளன. தேசிய அளவில் 7 கட்சிகளும், மாநில அளவில் 59 கட்சிகளும் தேர்தல் கமி‌ஷனால் அங்கீகரிக்கப்பட்டவையாக உள்ளன. மற்ற கட்சிகள் அனைத்தும் உரிய அங்கீகாரம் பெறாதவையாகும்.

கடந்த பிப்ரவரி, மார்ச் மாதத்தில் மட்டுமே புதிதாக 149 கட்சிகள் தொடங்கப்பட்டு தேர்தல் கமி‌ஷனில் பதிவு செய்யப்பட்டுள்ளன. #ElectionCommissions #ParliamentaryElection
Tags:    

Similar News