செய்திகள்

மனோகர் பாரிக்கர் மறைவு - ஜனாதிபதி, பிரதமர் மோடி இரங்கல்

Published On 2019-03-17 17:41 GMT   |   Update On 2019-03-17 17:41 GMT
கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். #GoaCM #ManoharParrikar #RIPManoharParrikar
புதுடெல்லி :

கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் இன்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மனோகர் பாரிக்கர் மறைவு செய்தி மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. பொதுவாழ்க்கையில் மனோகர் பாரிக்கரின் சேவையை நாட்டு மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள் என பதிவிட்டுள்ளார்.



பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மனோகர் பாரிக்கர் ஈடு இணையில்லாத தலைவர். உண்மையான தேசபக்தர். சிறந்த நிர்வாகி. அனைவராலும் பாராட்டப் பெற்றவர். நாட்டிற்கு அவர் ஆற்றிய பணிகள் பல தலைமுறையினரின் நினைவில் இருக்கும். அவரது மறைவு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இதேபோல், காங்கிரஸ் தலைவர் ராகுல் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தனது நோயை எதிர்த்து ஒரு ஆண்டுக்கும் மேலாக போராடிய கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் மறைவு வருத்தமளிக்கிறது. கட்சி எல்லைகளை தாண்டி அவருக்கு அனைவரும் மரியாதை அளித்தனர். அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். #GoaCM #ManoharParrikar #RIPManoharParrikar
Tags:    

Similar News