செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் கொடூரம்- தமிழக அரசிடம் அறிக்கை கேட்கிறது தேசிய மகளிர் ஆணையம்

Published On 2019-03-13 10:19 GMT   |   Update On 2019-03-13 10:19 GMT
பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யும்படி தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தி உள்ளது. #PollachiAbuseCase #NCW
புதுடெல்லி:

பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஒரு கும்பல் பலாத்காரம் செய்து மிரட்டிய சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பெண்களை சமூக வலைத்தளங்கள் மூலம் காதல் வலையில் விழவைத்து, கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து, பணம் பறித்து வார்த்தைகளால் சொல்ல முடியாத கொடூரங்களை நிகழ்த்தியுள்ளனர்.



இதுதொடர்பாக  சபரிராஜன் (வயது 25), திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோரை பொள்ளாச்சி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டி வரும் இந்த நபர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக தமிழக அரசு அறிக்கை அளிக்கும்படி தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தி உள்ளது. இளம்பெண்களை சீரழித்த குற்றவாளிகளுக்கு எதிராக சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளது.

இந்த விவகாரத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. சிபிசிஐடி அதிகாரிகள் இன்று விசாரணையைத் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. #PollachiAbuseCase #NCW
Tags:    

Similar News