செய்திகள்

அமிர்தசரஸ் தொகுதியில் மன்மோகன்சிங் போட்டியிட மாட்டார் - பஞ்சாப் முதல் மந்திரி

Published On 2019-03-13 05:53 GMT   |   Update On 2019-03-13 05:53 GMT
பாராளுமன்ற தேர்தலில் அமிர்தசரஸ் தொகுதியில் மன்மோகன்சிங் போட்டியிடமாட்டார் என பஞ்சாப் முதல் மந்திரி அம்ரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். #ManmohanSingh #AmarinderSingh
அமிர்தசரஸ்:

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அசாமில் இருந்து பாராளுமன்ற மேல்சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது பதவிக்காலம் வருகிற ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது.

எனவே வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் அமிர்தசரஸ் தொகுதியில் மன்மோகன்சிங் போட்டியிடுவார் என பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாகர் தெரிவித்து இருந்தார்.

அதை பஞ்சாப் முதல்- மந்திரி அம்ரீந்தர் சிங் மறுத்துள்ளார். மன்மோகன் சிங் அமிர்தசரஸ் தொகுதியில் நிச்சயம் போட்டியிட மாட்டார். வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவே இதற்கு காரணம்.

பஞ்சாபில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைப்பது பற்றி பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கெஜ்ரிவால் கூறியுள்ளார். பஞ்சாபை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிக்கு எந்த கூட்டணியும் தேவையில்லை.



எனவே ஆம் ஆத்மி கட்சியுடனோ, வேறு எந்த கட்சியுடனோ கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்றார்.

டெல்லியில் நேற்று மன்மோகன்சிங்கை அம்ரீந்தர்சிங் சந்தித்து பேசினார். அப்போது நடைபெற்ற ஆலோசனையின் முடிவில் அமிர்தசரஸ் தொகுதியில் மன்மோகன்சிங் போட்யிட மாட்டார் என்று அவர் அறிவித்தார். #ManmohanSingh #AmarinderSingh
Tags:    

Similar News