செய்திகள்

பாராளுமன்ற தேர்தலில் சபரிமலை விவகாரம்தான் முக்கிய பங்கு வகிக்கும் - பாரதிய ஜனதா மாநில செயலாளர்

Published On 2019-03-12 13:43 GMT   |   Update On 2019-03-12 13:43 GMT
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் சபரிமலை விவகாரம்தான் முக்கிய பங்கு வகிக்கும் என பாரதிய ஜனதா மாநில செயலாளர் சுரேந்திரன் கூறியுள்ளார். #BJP

திருவனந்தபுரம்:

சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் அய்யப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் மாநில அரசு சுப்ரீம் கோர்ட் உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டதால் கேரளாவை சேர்ந்த 2 இளம்பெண்கள் சபரிமலை கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இந்த பிரச்சினை கேரளாவில் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலின் போது சபரிமலை பிரச்சினை பற்றி பிரசாரம் செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள தலைமை தேர்தல் அதிகாரிகள் டிகா ராம் மீனா எச்சரித்து இருந்தார்.

ஆனால் இதற்கு பாரதிய ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. அந்த கட்சியின் கேரள மாநில தலைவர் சுரேந்திரன் இதுதொடர்பாக கூறியதாவது:-

சபரிமலை பிரச்சினை தொடர்பாக மாநில அரசு எடுத்த நிலைப்பாடு பற்றி பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் 100 சதவீதம் விவாதிக்கப்படும். இதில் யாரும் தலையிட முடியாது. பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் சபரிமலை விவகாரம்தான் முக்கிய பங்கு வகிக்கும்.

சபரிமலையில் இளம் பெண்கள் தரிசனம் செய்ய உதவிய ஆளும் கம்யூனிஸ்டு அரசின் மக்கள் விரோத செயலை எடுத்துக்கூறி பாரதீய ஜனதா பிரசாரம் செய்யும். நாங்கள் அப்படி பிரசாரம் செய்வதை தடுக்க தேர்தல்கமி‌ஷனுக்கு அதி காரம் இல்லை.

இவ்வாறு அவர் பேசினார். #BJP

Tags:    

Similar News