செய்திகள்

அசாமில் விஷச் சாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 143 ஆக அதிகரிப்பு

Published On 2019-02-24 14:43 GMT   |   Update On 2019-02-24 16:13 GMT
அசாம் மாநிலத்தில் விஷச் சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 143 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #HoochTragedy #AssamHoochTragedy
கவுகாத்தி:

அசாம் மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள கோலாஹாட் மாவட்டத்தில் தேயிலை தோட்டங்கள் அதிகமாக உள்ளன. இங்கு கோல்ஹாட் மற்றும் ஜோர்ஹாட் மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இப்பகுதியில், கடந்த 21ம் தேதி நடைபெற்ற ஒரு திருமண விழாவில் பங்கேற்ற பலர், அப்பகுதியில் உள்ள வியாபாரியிடம் விஷத்தன்மை கொண்ட கள்ளச் சாராயத்தை வாங்கி குடித்துள்ளனர். 

அந்த சாராயத்தை குடித்த சிறிது நேரத்திற்குள் சிலர் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். அவர்களில் 19 பேர் உயிரிழந்தனர். 200க்கு மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி தினந்தோறும் பலர் உயிரிழந்து வருகின்றனர்.



சம்பவம் நடந்த நான்காவது நாளான இன்றைய நிலவரப்படி விஷச் சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 143 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அசாம் மாநிலத்தையே உலுக்கி உள்ள இந்த சம்பவம் தொடர்பாக, கலால் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #HoochTragedy #AssamHoochTragedy
Tags:    

Similar News