செய்திகள்

அயோத்தி வழக்கு 26ம் தேதி விசாரணை- உச்ச நீதிமன்றம் தகவல்

Published On 2019-02-20 16:09 IST   |   Update On 2019-02-20 16:09:00 IST
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை அரசியல் சாசன அமர்வு வரும் 26-ம் தேதி முதல் விசாரணை நடத்த உள்ளது. #AyodhyaCase #SupremeCourt
புதுடெல்லி:

அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்மபூமி-பாபர் மசூதி நில உரிமை தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை விசாரிப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது. ஆனால் அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதிகள் யு.யு.லலித், என்.வி.ரமணா ஆகியோர் அடுத்தடுத்து விலகினர். மற்றொரு நீதிபதி எ.ஏ.பாப்டே விடுப்பில் சென்றார். இதுபோன்ற காரணங்களால் வழக்கு விசாரணை தாமதம் ஆனது.

அதன்பின்னர் புதிய அமர்வு அமைக்கப்பட்டது. இந்த அமர்வில் தலைமை நீதிபதியுடன், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.



இந்நிலையில், விடுப்பில் சென்றிருந்த நீதிபதி பாப்டே பணிக்குத் திரும்பியதையடுத்து, அயோத்தி வழக்கு வரும் 26-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான புதிய அமர்வு இந்த வழக்கை விசாரிக்க உள்ளது. #AyodhyaCase #SupremeCourt 
Tags:    

Similar News