செய்திகள்

காஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு

Published On 2019-02-16 15:52 GMT   |   Update On 2019-02-16 15:52 GMT
காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய நிலைகளின்மீது பாகிஸ்தான் படையினர் இன்று மாலை அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
ஜம்மு:

நமது நாட்டின் பல பகுதிகளில் பாகிஸ்தான் ஆதரவு பெற்று பயங்கரவாதிகள் வன்முறை தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில், காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் நேற்று முன்தினம் மத்திய பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.

இதுதவிர, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்திய எல்லைக்கோட்டுப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அவ்வப்போது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய வீரர்களும் உரிய பதிலடி தந்து வருகின்றனர்.



அவ்வகையில், ஜம்மு பகுதிக்குட்பட்ட ரஜோரி மாவட்டம்,  நவ்ஷேரா செக்டர் பகுதியில் உள்ள இந்திய கண்காணிப்பு சாவடிகளின் மீது இன்று மாலை சுமார் நான்கு மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீரென்று துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி தந்தனர்.

இருதரப்பிலும் ஏற்பட்ட சேதம் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. #Pakistanviolatedceasefire #Nowshera #RajouriLoc
Tags:    

Similar News