செய்திகள்

புதுவையில் முதல்வரின் தர்ணா 3வது நாளாக நீடிப்பு- இடைக்கால நிர்வாகியை நியமிக்க சபாநாயகர் கடிதம்

Published On 2019-02-15 03:28 GMT   |   Update On 2019-02-15 03:28 GMT
புதுச்சேரியில் ஆளுநருக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி நடத்தும் தர்ணா போராட்டம் 3வது நாளாக நீடிக்கும் நிலையில், மாநிலத்திற்கு இடைக்கால நிர்வாகியை நியமிக்க வேண்டும் என சபாநாயகர் கேட்டுக்கொண்டுள்ளார். #PuducheryCMDharna #KiranBedi
புதுச்சேரி:

புதுச்சேரியில் கிரண்பேடி கவர்னராக பொறுப்பேற்றதில் இருந்து அவருக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கும் இடையிலான பனிப்போர் இப்போது உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டத்தை போலீசார் அமல்படுத்த வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

ஹெல்மெட் விவகாரம் பெரும் கொந்தளிப்பு ஏற்படுத்தியதை அறிந்த முதல் அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். நாராயணசாமி தலைமையில் 3வது நாளாக இன்றும் தர்ணா போராட்டம் நீடிக்கிறது. போராட்டம் ஒருபுறம் நடைபெற்றாலும், இதனை கண்டுகொள்ளாமல் புதுச்சேரியில் இருந்து புறப்பட்ட கவர்னர் கிரண்பேடி, டெல்லி சென்றார்.



அதேசமயம், ஆளுநர் மாளிகை வளாகம் போராட்டக்களமாக மாறியிருப்பதால், அதிவிரைவு அதிரடிப்படை, துணை ராணுவம் மற்றும் தொழில் பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம், உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிற்கு அவசர கடிதம் அனுப்பி உள்ளார். புதுச்சேரியில் தற்போது அசாதாரண சூழல் நிலவுவதால் இடைக்கால நிர்வாகியை நியமிக்கவேண்டும் என சபாநாயகர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.  #PuducheryCMDharna #KiranBedi
Tags:    

Similar News