செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் காந்தி பொம்மையை சுட்ட இந்து அமைப்பினர் கைது

Published On 2019-02-07 13:16 IST   |   Update On 2019-02-07 13:16:00 IST
உத்தரப்பிரதேசத்தில் காந்தி உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்ட இந்து அமைப்பினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். #MahatmaGandhi #HinduMahasabha
ஆக்ரா:

கடந்த ஜனவரி மாதம் 30-ந் தேதி மகாத்மா காந்தி நினைவு நாள் நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது.

அப்போது உத்தரப்பிரதேசத்தின் அலிகார் நகரில் தப்பால் என்ற இடத்தில் அகில பாரத இந்து மகாசபா அமைப்பினர் காந்தியின் உருவ பொம்மையை வடிவமைத்து அதை துப்பாக்கியால் சுட்டு ரத்தம் வருவது போல் சித்தரித்து இருந்தனர்.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அலிகார் போலீசார் விரைந்து சென்று உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்ட 7 பேரை கைது செய்தனர். இதில் 3 பேர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

இதற்கிடையே இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததாக இந்து மகா சபா பொதுசெயலாளர் பூஜா சகுன் பாண்டே, அவரது கணவர் அசோக் பாண்டே ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

நேற்று அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள். #MahatmaGandhi #HinduMahasabha
Tags:    

Similar News