செய்திகள்

விமான பயணிகளுக்கு வழங்கிய உணவில் கரப்பான்பூச்சி - ஏர் இந்தியா பகிரங்க மன்னிப்பு

Published On 2019-02-05 06:55 GMT   |   Update On 2019-02-05 06:55 GMT
மும்பை நோக்கி சென்றுகொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவில், கரப்பான் பூச்சி இருத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.#AirIndiaFlight #cockroachinfood
புதுடெல்லி:

போபாலில் இருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா விமானத்தில், கடந்த சனிக்கிழமை ரோஹித் ராஜ் சிங் என்ற பயணி பயணம் செய்துக் கொண்டிருந்தார். பயணிகளுக்கு வழக்கம்போல் உணவு வழங்கப்பட்டது. அப்போது அவருக்கு இட்லி-வடை மற்றும் சாம்பார் வழங்கப்பட்டுள்ளது. இதில் கரப்பான்பூச்சி ஒன்று இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதனை உடனடியாக புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். இது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தது.

இச்சம்பவம் நடந்து இரு தினங்கள் ஆன நிலையில், இன்று ஏர் இந்தியா நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த பயணியிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

அதில், ‘நாங்கள் இச்சம்பவத்தை தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ளோம். இதையடுத்து உடனடியாக அந்த கேட்டரிங் நிறுவனத்துக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. எங்கள் மூத்த அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பயணியுடன் தொடர்பு கொண்டு இது குறித்து பேசினர். மேலும் தகுந்த நடவடிக்கைகள் சரியான முறையில் எடுக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளது. #AirIndiaFlight #cockroachinfood 
Tags:    

Similar News