செய்திகள்

இமாச்சல பிரதேசத்தில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்தது- 26 பேர் படுகாயம்

Published On 2019-01-22 11:22 IST   |   Update On 2019-01-22 11:22:00 IST
இமாச்சல பிரதேசம் சுர்காத் பகுதியின் அருகே மலைப் பாங்கான பாதையில் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 26 பேர் படுகாயமுற்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #HimachalPradeshAccident
சிம்லா:

மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்த பகுதி இமாச்சல பிரதேசம் ஆகும். இம்மாநிலத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள சுர்காத் பகுதியின் அருகே இன்று காலை சுற்றுலா பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, பக்கவாட்டில் சறுக்கி பள்ளத்தாக்கில் விழுந்தது.

இவ்விபத்தில் 26 பேர் படுகாயமுற்றதாகவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படுகாயமடைந்தவர்களில், 18 பேர் சோனகர் மாவட்டத்தில் நலாஹார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் 8 பேர் கவலைக்கிடமான நிலையில் சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். #HimachalPradeshAccident

Tags:    

Similar News