செய்திகள்

எதிர்க்கட்சிகள் மாநாட்டில் பங்கேற்பு: சத்ருகன்சின்கா மீது நடவடிக்கை பாயுமா?

Published On 2019-01-20 08:44 GMT   |   Update On 2019-01-20 08:44 GMT
எதிர்க்கட்சிகள் மாநாட்டில் பங்கேற்ற சத்ருகன்சின்கா மீது கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்கும் என தெரிகிறது. #ShatrughanSinha

புதுடெல்லி:

கொல்கத்தாவில் பா.ஜனதாவுக்கு எதிராக 22 எதிர்க்கட்சி தலைவர்கள் கைகோர்த்து உள்ளனர்.

இம்மாநாட்டில் முன்னாள் மத்திய மந்திரிகளான பா.ஜனதா கட்சியை சேர்ந்த யஷ்வந்த் சின்கா, அருண்ஷோரி, மற்றும் சத்ருகன் சின்கா எம்.பி. ஆகியோரும் பங்கேற்றனர். பா.ஜனதாவில் அதிருப்தியில் இருக்கும் சத்ருகன்சின்கா ஏற்கனவே மோடியையும், மத்திய அரசின் செயல்பாட்டையும் வெளிப்படையாக விமர்சனம் செய்து வந்தார்.

இந்தநிலையில் எதிர்க்கட்சிகள் நடத்திய மாநாட்டில் அவர் பங்கேற்றது பா.ஜனதா தலைவர்களுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இதையடுத்து சத்ருகன்சின்கா மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுதொடர்பாக பா.ஜனதா தேசிய செய்தி தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி கூறியதாவது:-

பா.ஜனதா வழங்கிய எம்.பி.பதவியில் இருந்து சத்ருகன்சின்கா சலுகைகளை அனுபவித்துக்கொண்டு இருக்கிறார். ஆனால் அதே வேளையில் கட்சிக்கு எதிராக பேசிவருகிறார். இது போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பா.ஜனதாவுக்கு எப்போதுமே முக்கியமானது.

இதுதொடர்பாக கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்கும். சில பேர் கட்சி பின்னால் இருக்க விரும்புகிறார்கள். இதனால் கட்சியில் இருந்து விலகாமல் உள்ளனர். அதேநேரத்தில் அவர்கள் சந்தர்ப்பவாதிகளாக உள்ளனர் என்றார். #ShatrughanSinha

Tags:    

Similar News