செய்திகள்

மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டி - நடிகர் பிரகாஷ்ராஜ்

Published On 2019-01-05 20:27 IST   |   Update On 2019-01-05 20:27:00 IST
வரவுள்ள மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிட உள்ளதாக நடிகர் பிரகாஷ்ராஜ் இன்று அறிவித்துள்ளார். #ParliamentElection #PrakashRaj #BengaluruCentral
பெங்களூரு:

நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த ஆண்டில் இருந்து அரசியல் பேசி வருகிறார். குறிப்பாக, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவை எதிர்த்து அடிக்கடி அவர் கருத்து வெளியிடுகிறார். தனது நெருங்கிய தோழியான கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் அவர் பாஜக அரசை மிக கடுமையாக சாடினார்.

இதையடுத்து பிரகாஷ்ராஜை தங்களது கட்சியில் சேர்த்துக்கொள்ள காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளும் முயற்சிகள் செய்தன. ஆனால் பிரகாஷ்ராஜ் எந்த கட்சியிலும் சேரவில்லை.

கமல்ஹாசன், ரஜினிகாந்த் போல அவர் கட்சி தொடங்குவாரா? என்றும் கேட்கப்பட்டது. ஆனால் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்று அவர் ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.



இதற்கிடையே நடிகர் பிரகாஷ்ராஜ் வரும் பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாகவும், விரைவில் தொகுதி பற்றி அறிவிப்பேன் எனவும் கடந்த ஒன்றாம் தேதி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், வரும் மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிட போவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் இன்று அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறேன். எனது புதிய பயணத்தை அங்கீகரித்த அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.
#ParliamentElection #PrakashRaj #BengaluruCentral
Tags:    

Similar News