செய்திகள்

ஜம்மு காஷ்மீர் - பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர் மரணம்

Published On 2019-01-03 10:03 GMT   |   Update On 2019-01-03 10:03 GMT
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #JammuKashmir #Avalanche #Armyjawandies
ஸ்ரீநகர்:

வட மாநிலங்களில் பனிக்காலம் தொடங்கியதில் இருந்து கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. காஷ்மீர் மாநிலத்தில் குளிர்காலத்தில் 40 நாட்களில் மிகக்கடுமையான பனிப்பொழிவு நிலவுவது வழக்கம். இந்த ஆண்டு புத்தாண்டு தினத்தில் இருந்து கடும் குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
 
ஸ்ரீநகர், குல்கமார்க் மற்றும் பகல்காம் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களில் இன்று பனிப்பொழிவு வழக்கத்தைவிட சற்று அதிகமாகவே இருந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. 



இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக இன்று திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. அந்த பகுதியில் பணியில் இருந்த 2 ராணுவ வீரர்கள் இதில் சிக்கிக் கொண்டனர்.

தகவலறிந்த மீட்புப் படையினர் அங்கு விரைந்து சென்றனர். அதில், ராணுவ வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு வீரர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார் என அதிகாரிகள் 
தெரிவித்தனர். #JammuKashmir #Avalanche #Armyjawandies
Tags:    

Similar News