செய்திகள்

10 பயங்கரவாதிகள் டெல்லி கோர்ட்டில் ஆஜர்- 15 நாட்கள் காவலில் எடுக்க என்ஐஏ முயற்சி

Published On 2018-12-27 10:06 GMT   |   Update On 2018-12-27 10:06 GMT
டெல்லி மற்றும் உபியில் கைது செய்யப்பட்ட 10 பயங்கரவாதிகள் இன்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ மனு அளித்துள்ளது. #ISISModuleCase #NIA
புதுடெல்லி:

டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நடத்திய தொடர் சோதனைகளில், ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடைய இயக்கத்தைச் சேர்ந்த 10 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து லாக்கெட் லாஞ்சர் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்மூலம் டெல்லி உள்ளிட்ட வட இந்தியாவில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தவும், முக்கிய அரசியல் தலைவர்களை கொல்லவும் பயங்கரவாதிகள் தீட்டியிருந்த சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில், கைது செய்யப்பட்ட 10 பேரும் பலத்த பாதுகாப்புடன் இன்று டெல்லி கூடுதல் அமர்வு நீதிபதி அஜய் பாண்டே முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.  அவர்களின் முகங்களை துணியால் மறைத்து நீதிமன்றத்திற்கு அழைத்து வந்திருந்தனர். 10 பேரிடம் இருந்தும் மேலும் பல்வேறு தகவல்களை பெற வேண்டியிருப்பதால் அவர்களை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு என்ஐஏ தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.  #ISISModuleCase #NIA
Tags:    

Similar News