செய்திகள்

பாராளுமன்ற தேர்தல் - பீகாரில் பா.ஜ.க. கூட்டணி கட்சிகளுக்குள் தொகுதி உடன்பாடு முடிவானது

Published On 2018-12-23 08:56 GMT   |   Update On 2018-12-23 08:56 GMT
பாராளுமன்ற தேர்தலில் பீகார் மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளில் பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதா தளம் தலா 17 தொகுதிகளிலும் லோக் ஜனசக்தி கட்சி 6 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. #NDAseatsharing #Biharseatsharing
புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் மாநில வாரியாக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு செய்வதிலும் வேட்பாளர் தேர்விலும் பா.ஜ.க. தலைமை தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில், பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ் குமார், லோக் ஜனசக்தி கட்சி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் ஆகியோருடன் இன்று டெல்லியில் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா தொகுதி உடன்பாடு குறித்து ஆலோசனை நடத்தினார்.



இந்த ஆலோசனைக்கு பின்னர் பீகார் மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளில் பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதா தளம் தலா 17 தொகுதிகளிலும் லோக் ஜனசக்தி கட்சி 6 தொகுதிகளிலும் போட்டியிடுவது என்று உடன்படிக்கை செய்யப்பட்டது.

மேலும், பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சிக்கு ஒரு இடம் அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அநேகமாக, மேல்சபை தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #NDAseatsharing #Biharseatsharing
Tags:    

Similar News