செய்திகள்

ரிசர்வ் வங்கி கவர்னர் மிகப்பெரிய ஊழல்வாதி - சுப்பிரமணியசாமி

Published On 2018-12-23 11:06 IST   |   Update On 2018-12-23 11:06:00 IST
ரிசர்வ் வங்கி கவர்னர் மிகப்பெரிய ஊழல்வாதி என்று பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கூறியுள்ளார். #SubramanianSwamy

ஐதராபாத்:

ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி பேசியதாவது:-

ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் மிகப்பெரிய ஊழல்வாதி. நிதி அமைச்சகத்தில் இருந்து அவரை பதவி நீக்கம் செய்ய வைத்தேன். அப்படிப்பட்டவர் ரிசர்வ் வங்கியின் கவர்னராக நியமிக்கப்பட்டது ஆச்சரியத்தை அளிக்கிறது.

ரிசர்வ் வங்கி கவர்னர் பதவிக்கு பெங்களூர் ஐ.ஐ.எம். பேராசிரியர் ஆர்.வைத்தியநாதன் தான் தகுதியானவர். அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்.

பிரதமர் மோடி அரசுக்கு எதிராக எதிர்ப்பு அலை எதுவும் வீசவில்லை. வருகிற பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் பா.ஜனதாவே வெற்றி பெறும்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இங்கிலாந்து குடியுரிமை வைத்துள்ளார். அவரால் நமது நாட்டின் பிரதமராக முடியாது. ராகுலின் இந்திய குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும். அப்படி செய்தால் அவரால் எம்.பி.யாக கூட முடியாது.

தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள மக்கள் அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்ட வேண்டும் என்று விரும்புகின்றனர். எனவே அயோத்தியில் நிச்சயம் ராமர் கோவில் கட்டுவோம். ராமர் கோவில் தொடர்பாக இந்து தர்ம ஆச்சார்ய சபையிலும் நான் திட்டம் அளித்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார். #SubramanianSwamy

Tags:    

Similar News