செய்திகள்

வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற தந்தைக்கு இரட்டை மரண தண்டனை

Published On 2018-12-18 10:29 IST   |   Update On 2018-12-18 10:29:00 IST
மத்திய பிரதேச மாநிலத்தில் வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்த நபருக்கு இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #DoubleDeathPenalty
ரட்லாம்:

மத்திய பிரதேச மாநிலம் ரட்லாம் மாவட்டம் ஜவோரா நகரைச் சேர்ந்த 42 வயது நபர் ஒருவர், 5 வயது நிரம்பிய வளர்ப்பு மகளை (மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த குழந்தை) கடந்த ஏப்ரல் மாதம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அந்த குழந்தையை சரமாரியாக அடித்துள்ளார். இதில் அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இதுதொடர்பாக குழந்தையின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளியைக் கைது செய்தனர். அவர் மீது ஜவோரா நகரில் உள்ள அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. குழந்தையின் தாய் அளித்த வாக்குமூலம் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையின் முடிவில், குற்றவாளி மீதான குற்றம் நிரூபணமானது.

இதையடுத்து குற்றவாளிக்கு இரட்டை மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதுதவிர 5 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. இதையடுத்து குற்றவாளி சிறையில் அடைக்கப்பட்டார்.

12 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்கும் வகையில் மத்திய பிரதேச சட்டமன்றத்தில் கடந்த ஆண்டு சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. #DoubleDeathPenalty
Tags:    

Similar News