செய்திகள்

உயிரைப் பறித்த செல்பி மோகம் - ராட்சத ராட்டினத்தில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

Published On 2018-12-10 15:11 IST   |   Update On 2018-12-10 15:11:00 IST
உத்தர பிரதேசத்தில் ராட்டினத்தில் இருந்து செல்பி எடுக்க முயன்றபோது தவறி விழுந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். #SelfieDeath #UPFair
பாலியா:

உத்தர பிரதேச மாநிலம் பாலியா மாவட்டம் சதார் பகுதியில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. ஏராளமான கடைகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்திருப்பதால் விடுமுறை தினங்களில் பொதுமக்கள் வருகை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நேற்று கண்காட்சியில் ராட்சத ராட்டினம் சுற்றிக்கொண்டிருந்தபோது ஒரு பெண் திடீரென ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்தார். உடனடியாக அந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

விசாரணையில் அந்தப் பெண் ராணி (வயது 20) என்பதும், செல்பி எடுக்கும்போது நிலைதடுமாறி ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்ததும் தெரியவந்தது. #SelfieDeath #UPFair
Tags:    

Similar News