செய்திகள்
ஷோபா சுரேந்திரன்

கேரள ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்த பா.ஜனதா பெண் நிர்வாகிக்கு அபராதம்

Published On 2018-12-05 08:08 GMT   |   Update On 2018-12-05 08:08 GMT
கேரள ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்த பா.ஜனதா பெண் நிர்வாகி ஷோபா சுரேந்திரனுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். #BJP #ShobhaSurendran
திருவனந்தபுரம்:

கேரள பா.ஜனதா பொதுச் செயலாளராக இருப்பவர் ஷோபா சுரேந்திரன். இவர் கேரள ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்தார்.

அதில் சபரிமலையில் மத்திய மந்திரி மற்றும் ஐகோர்ட்டு நிதிபதி ஆகியோரை போலீசார் அவமதித்ததாகவும், பக்தர்கள் மீது பொய்யான வழக்குகளை பதிவு செய்து சிறையில் அடைப்பதாகவும், அத்துமீறி செயல்படும் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டில் நடந்தது. அப்போது தனிப்பட்ட விளம்பரத்திற்காக இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்து கோர்ட்டின் பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று ஷோபா சுரேந்திரனை நீதிபதி கண்டித்தார். மேலும் அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

கோர்ட்டு விதித்த அபராதத்தை 2 வாரத்திற்குள் செலுத்த வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அபராத தொகை இரட்டிப்பாக்கப்படும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.

கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து ஷோபா சுரேந்திரன் கோர்ட்டில் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.  #BJP #ShobhaSurendran


Tags:    

Similar News