செய்திகள்

அயோத்தி ராமர் கோவில் விவகாரம்: சிவசேனா சார்பில் 24-ந்தேதி பேரணி

Published On 2018-12-05 02:21 GMT   |   Update On 2018-12-05 02:21 GMT
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட கோரி வருகிற 24-ந் தேதி பேரணி நடத்தப்படும் என்று உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். #Ayodhya #RamTemple #UdhavThakre
மும்பை :

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மும்பை தாதரில் உள்ள சேனா பவனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பிரச்சினை ஒவ்வொரு தேர்தலின் போதும் எழுகிறது. தேர்தல் முடிந்ததும் அது மறந்து போகிறது. மத்தியில் மோடி அரசு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி செய்து வருகிறது. 4½ ஆண்டுகளாக ராமர் கோவில் கட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதன் மூலம் மோடி அரசு கும்பகர்ண தூக்கத்தில் இருப்பதை உணர முடிகிறது. இந்த கும்பகர்ண தூக்கத்தில் இருந்து அரசை எழுப்ப எங்களது கட்சி சார்பில் போராடி வருகிறோம்.

இதன் அடுத்த கட்டமாக வருகிற 24-ந் தேதி பேரணி நடத்த உள்ளோம். இந்த பேரணி கோவில் நகரமான சோலாப்பூர் மாவட்டம் பண்டர்பூரில் நடக்கிறது.

பல்வேறு பிரச்சினைகளை அவசர சட்டம் கொண்டு வந்து மத்திய அரசு தீர்த்து வைத்துள்ளது. ஆனால் ராமர் கோவில் கட்டும் பிரச்சினையில் அதேபோல நடந்து கொள்ளாதது ஏன்?.

இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார். #Ayodhya #RamTemple #UdhavThakre
Tags:    

Similar News