செய்திகள்

இந்தியாவின் பணக்கார கட்டிட காண்டிராக்டர் பாஜக எம்எல்ஏ - ரூ.27,150 கோடி சொத்து

Published On 2018-11-22 12:57 IST   |   Update On 2018-11-22 12:57:00 IST
இந்தியாவின் பணக்கார கட்டிட காண்டிராக்டர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் பாஜக எம்எல்ஏ முதல் இடத்தில் உள்ளார். #BJP #MangalPrabhatLodha
மும்பை:

மராட்டிய மாநிலம் மலபார்ஹில் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. மங்கள் பிரபாத் லோதா.

கட்டிட காண்டிராக்ட் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் இவர் மிகப்பெரிய கோடிசுவரர் ஆவார்.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான இந்தியாவின் பணக்கார கட்டிட காண்ட்டிராக்டர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி பா.ஜனதா எம்.எல்.ஏ.வான மங்கள் பிரபாத் லோதாவுக்கு ரூ.27,150 கோடி சொத்து இருப்பது தெரிய வந்தது. அவர் இந்திய பணக்கார கட்டுமான நிறுவன அதிபர்களில் முதல் இடத்தில் உள்ளார்.

கடந்த ஆண்டு அவர் ரூ.18,610 கோடியுடன் 2-வது இடத்தில் இருந்தார். தற்போது ரூ.8540 கோடி சொத்து அதிகரித்து முதல் இடத்துக்கு முன்னேறி இருக்கிறார்.

எம்பசி பிராபர்ட்டி டெவலப்மென்ட் அதிபர் ரூ.23,160 கோடி சொத்துடன் 2-வது இடத்தில் உள்ளார். அவர் கடந்த ஆண்டு ரூ.16,700 கோடியுடன் 3-வது இடத்தில் இருந்தார். #BJP #MangalPrabhatLodha
Tags:    

Similar News