செய்திகள்

மாலத்தீவு புதிய அதிபர் சாலிக் பதவி ஏற்பு - பிரதமர் மோடி நேரில் வாழ்த்து

Published On 2018-11-17 13:05 IST   |   Update On 2018-11-17 13:05:00 IST
மாலத்தீவு புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று நேரில் வாழ்த்து தெரிவிக்கிறார்.#Maldivespolls #IbrahimMohamedSolih #PMModi

புதுடெல்லி:

மாலத்தீவில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடந்தது. அதில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட இப்ராகிம் முகமது சாலிக் வெற்றி பெற்றார்.

அதை தொடர்ந்து புதிய அதிபராக இன்று அவர் பதவி ஏற்கிறார். இதற்கான விழா தலைநகர் மாலேவில் நடக்கிறது.

விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று நேரில் வாழ்த்துகிறார். அதற்காக இன்று அவர் மாலத்தீவு புறப்பட்டு செல்கிறார்.

இதுகுறித்து டுவிட்டரில் அவர் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் “மாலத்தீவின் புதிய அதிபராக இன்று பதவி ஏற்கும் சாலிக்குக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.


மாலத்தீவின் கட்டுமானம், சுகாதார மேம்பாடு, மற்றும் மனித வள மேம்பாட்டு வளர்ச்சியில் இந்தியாவும் இணைந்து பணியாற்ற விரும்புகிறது.

சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலில் ஜனநாயகம் மலர்வதற்காக மக்கள் வாக்களித்துள்ளனர். மாலத்தீவில் நிலையான ஜனநாயகம், அமைதி நிலவ வேண்டும் என இந்தியா விரும்புகிறது”

தங்களது பணியை திறம்பட ஆற்றும்படி வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

பிரதமராக பதவி ஏற்ற பிறகு தற்போது தான் மோடி முதன்முறையாக மாலத்தீவு செல்கிறார். #Maldivespolls #IbrahimMohamedSolih #PMModi

Tags:    

Similar News