செய்திகள்

என்னை புனேவுக்கு திரும்பி செல்லும்படி போலீசார் வலியுறுத்துகின்றனர் - திருப்தி தேசாய்

Published On 2018-11-16 13:18 GMT   |   Update On 2018-11-16 13:18 GMT
என்னை மீண்டும் புனேவுக்கு திரும்பி செல்லும்படி போலீசார் வலியுறுத்துகின்றனர் என கொச்சி விமான நிலையத்தில் காத்திருக்கும் திருப்தி தேசாய் தெரிவித்துள்ளார். #SabarimalaShrine #TruptiDesai
சபரிமலை:

மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. வழிபாட்டுக்காக 2 மாதங்கள் கோவில் நடை திறந்திருக்கும்.

சபரிமலை கோவிலில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை அனுமதி அளிப்பதற்கு எதிராக போராட்டம் தொடரும் நிலையில், பெண்ணியவாதியான திருப்தி தேசாய் சபரிமலை கோவிலுக்குள் செல்வேன் என்று அறிவித்தார். அதன்படி இன்று காலை 4:30 மணிக்கு கொச்சி விமான நிலையம் வந்தடைந்தார்.

விமான நிலையத்தை விட்டு அவர் வெளியே வரமுடியாத வகையில் போராட்டக் குழுவினர் அங்கு குவிந்ததால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டனது. போராட்டக்காரர்கள் பெருமளவு திரண்டதால் திருப்தி தேசாயை வெளியே அனுமதிக்கவில்லை. 12 மணி நேரத்துக்கும் மேலாக தேசாய் அங்கிருந்து வெளியேற முடியாத நிலை உள்ளது.

இந்நிலையில், கொச்சி விமான நிலையத்தில் திருப்தி தேசாய் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், போலீசார் என்னை சந்தித்தனர். அவர்கள் என்னை மீண்டும் புனேவுக்கு திரும்பி செல்லும்படி கேட்டுக் கொண்டனர் என தெரிவித்துள்ளார். #SabarimalaShrine #TruptiDesai
Tags:    

Similar News