செய்திகள்

மாநில தலைநகர்களில் மத்திய தலைமை செயலகம் - மத்திய அரசு முடிவு

Published On 2018-11-14 00:50 GMT   |   Update On 2018-11-14 00:50 GMT
அனைத்து மாநில தலைநகர்களிலும் மத்திய அரசுக்கென பிரத்யேக மண்டலங்களை உருவாக்கி, அங்கு மத்திய தலைமை செயலகங்களை கட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
புதுடெல்லி:

மாநில தலைநகர்களில் மாநில அரசின் தலைமை செயலகம் செயல்படுகிறது. அங்கு அனைத்து துறை அலுவலகங்களும் ஒரே இடத்தில் இயங்குகின்றன. ஆனால், மத்திய அரசுக்கு டெல்லியில் மட்டுமே ஒரே இடத்தில் தலைமை செயலகம் உள்ளது.

எனவே, அனைத்து மாநில தலைநகர்களிலும் மத்திய அரசுக்கென பிரத்யேக மண்டலங்களை உருவாக்கி, அங்கு மத்திய தலைமை செயலகங்களை கட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சமீபத்தில், மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இந்த கருத்து தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஒவ்வொரு மாநில தலைநகரிலும் மத்திய அரசு துறைகளுக்கு எவ்வளவு நிலம் உள்ளது? எவ்வளவு இடம் தேவைப்படும்? என்ற விவரங்களை மண்டல அதிகாரிகளிடம் மத்திய பொதுப்பணித்துறை கேட்டுள்ளது.

அவர்கள் விவரங்களை அளித்த பிறகு, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகத்திடம் செலவு மதிப்பீட்டுடன், முறையான திட்ட வரைவு சமர்ப்பிக்கப்படும் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஒரே இடத்தில் எல்லா அலுவலகங்களும் செயல்படுவதன் மூலம், மக்களுக்கும் வேலை எளிதாக முடியும், நேரமும் மிச்சமாகும் என்று அவர் கூறினார். 
Tags:    

Similar News