செய்திகள்

சிபிஐ முன்னாள் இயக்குனர் அலோக் வர்மா மீதான விசாரணை அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்

Published On 2018-11-12 09:05 GMT   |   Update On 2018-11-12 09:05 GMT
சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை அறிக்கையை மத்திய ஊழல் ஒழிப்பு கண்காணிப்பகம் சுப்ரீம் கோர்ட்டில் இன்று தாக்கல் செய்தது. #CBI #CVC #AlokKumar #CBIDirector
புதுடெல்லி:

சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே மோதல் இருந்து வந்த நிலையில், ராகேஷ் அஸ்தானா 3 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

அலோக் வர்மா சி.பி.ஐ. இயக்குனர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்ட நிலையில் தன்னை பதவி நீக்கம் செய்ததை எதிர்த்து அலோக் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நீதிபதி பட்நாயக் மேற்பார்வையில் மத்திய ஊழல் தடுப்பு குழு ஒன்றை நியமித்து கடந்த 26-10-2018 சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இரண்டு வாரங்களுக்குள் விசாரணையை முடித்து சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை அறிக்கையை சீலிட்ட உறையில் வைத்து தாக்கல் செய்ய வேண்டும் என காலக்கெடுவும் விதிக்கப்பட்டது.


இந்நிலையில், விசாரணை அறிக்கையை ஊழல் தடுப்பு கண்காணிப்பு குழுவின் வழக்கறிஞர் துஷார் மேத்தா இன்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையை பதிவு செய்துகொண்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோரை கொண்ட அமர்வு மறுவிசாரணையை நவம்பர் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. #CBI #CVC #AlokKumar #CBIDirector
Tags:    

Similar News