செய்திகள்

சிறப்பு பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது

Published On 2018-11-05 12:35 GMT   |   Update On 2018-11-05 12:35 GMT
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னர் சித்திர திருநாள் பலராம வர்மா பிறந்தநாளையொட்டி அத்தழப்பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. #SabarimalaTemple
திருவனந்தபுரம்:

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னர் சித்திர திருநாள் பலராம வர்மாவின் பிறந்தநாளையொட்டி 'அத்தழப்பூஜை’ எனப்படும் சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஒருநாள் மட்டும் தரிசனத்துக்காக திறக்கப்படுவது மரபாக இருந்து வருகிறது.

அவ்வகையில், இன்று நடை திறக்கப்படுவதை முன்னிட்டு சபரிமலை பகுதியை சுற்றி கடந்த 24 மணிநேரமாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நிலக்கல் மற்றும் பம்பை பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.



முதன்முறையாக, கோவிலின் அருகே 50 வயதை கடந்த பெண் போலீசாரும் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்நிலையில், சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. நாளை இரவு 10.30 மணிவரை நடை திறந்திருக்கும் என்பதால் ஏராளமான ஐயப்பன் பக்தர்கள் இருமுடி கட்டுடன் தரிசனம் செய்து வருகின்றனர். #SabarimalaTemple #SabarimalaTempleopened #Athazhapuja 
Tags:    

Similar News