செய்திகள்

மிசோரம் சபாநாயகர் திடீர் ராஜினாமா - பாஜகவில் இணைகிறார்

Published On 2018-11-05 06:55 GMT   |   Update On 2018-11-05 06:55 GMT
மிசோரம் மாநில சட்டசபை சபாநாயகர் இன்று திடீரென தன் பதவியை ராஜினாமா செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #MizoramSpeaker #MizoSpeakerResigns
ஐசால்:

மிசோரம் மாநிலத்தில் வரும் 28-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வெற்றி  பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தீவிர களப்பணியாற்றி வருகிறது. இதற்காக முக்கிய தலைவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாலக் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் சபாநாயகர் ஹிபேய் இன்று திடீரென தன் பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக விளங்கிய ஹிபேய், தன் ராஜினாமா கடிதத்தை துணை சபாநாயகரிடம் வழங்கினார். அவருடன் பாஜக மூத்த தலைவர் பிடி சக்மா மற்றும் சிலர் உடன் சென்றனர்.



இன்று பிற்பகல் ஐசாலில் உள்ள பாஜக தலைமையகத்திற்கு செல்லும் ஹிபேய்,  முறைப்படி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாலக் தொகுதியில் வெற்றி வாய்ப்பு உள்ள வேட்பாளரான ஹிபேய் விலகியது காங்கிரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. #MizoramSpeaker #MizoSpeakerResigns
Tags:    

Similar News